ADDED : பிப் 19, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருவாண்டார் கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா நடந்தது.
தலைமையாசிரியர் விசாகன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி உதவி ஆய்வாளர் புவியரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சாலை செல்வம், சிறுவர் பக்கம் புத்தக்க கடை நிறுவனர் நாகேஷ், புதுவை தமிழ் சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, ஆய்வாளர் சந்துரு, மாயவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். புத்தக திருவிழாவில் சிறுவர்களுக்கான நுால்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.
