ADDED : ஜன 27, 2025 04:35 AM

புதுச்சேரி : உலகத்தமிழ் பண்பாட்டுஇயக்கம் சார்பில், எல்லை. சிவக்குமார் எழுதிய 'பயணங்கள் முடிவதில்லை' நுால் வெளியீட்டு விழா புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார அரங்கில் நடந்தது.
ராமலிங்கம் தலைமை தாங்கினார். உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் தங்கராஜா நுாலை வெளியிட, தலைவர் அமிர்தலிங்கம் பகீரதன், வெற்றித்தமிழர் பேரவை தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராசு, புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்ற செயலாளர் அன்புச்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்க பொதுச்செயலாளர் கணேசன், ரீயூனியன் யோகாச்சாரி, பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் கருணாநிதி, சமுதாய கல்லுாரி தமிழ்துறை தலைவர் மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசினார். முனைவர் முருகையன் வரவேற்றார்.முனைவர் லட்சுமி தத்தை நன்றி கூறினார்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், பொருளாளர் சுப்பையா, தமிழ்சங்க செயலாளர் மோகன்தாஸ், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கலை இலக்கியப் பெருமன்ற பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் முனிசாமி, சந்திரகுமார், ஜெயா, யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

