/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண்டசோழநல்லுாரில் போர்வெல் அமைக்கும் பணி
/
பண்டசோழநல்லுாரில் போர்வெல் அமைக்கும் பணி
ADDED : டிச 27, 2025 05:24 AM

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில், நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 18 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், கிராம குடிநீர்த்திட்ட உதவிப்பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் நிவேதித்தா, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

