/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீண்ட இழுபறிக்கு பின் தாவரவியல் பூங்கா திறப்பு
/
நீண்ட இழுபறிக்கு பின் தாவரவியல் பூங்கா திறப்பு
ADDED : அக் 18, 2025 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள தாவரவியல் பூங்கா 200 ஆண்டு களுக்கு முன், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜார்ஜஸ் கெரார்ட் சாமுவேல் பெரோட்டட்' என்பவரால் உருவாக்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவை 13 கோடியில் பு துப்பிக்கும் பணி நடந்தது.
தாவரவியல் பூங்கா பணிகள் முடிந்து, பல மாதங்களுக்கு முன், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா காணாமல் பூட்டியே இருந்தது.
பூங்காவை சுற்றி பார்க்க வாங்கப்பட்ட 4 பேட்டரி கார்கள், புதிய பேட்டரி சிறுவர் உல்லாச ரயில் ஒன்று தயார் நிலையில் உள்ளது. பல மாதங்களாக திறக்கப்படாத நிலையில், நீண்ட இழுபறிக்கு பின், வரும் அக்., 24ம் தேதி பூங்கா திறக்கப்பட உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.