UPDATED : அக் 16, 2024 09:31 AM
ADDED : அக் 16, 2024 05:20 AM

போக்குவரத்து பாதிக்கும்
நுாறடிச்சாலை மேம்பாலத்தில் ஒவ்வொரு நிமிடமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து உடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
அனைத்து வாகனங்களும், நெல்லித்தோப்பு புவன்கரே வீதி வழியாக திருப்பி விடப்படும். அதனால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் விரிசல் சரிசெய்யும் பணியும் பல மாதங்கள் நடக்கும்.
இதனால் விரிசல் பெரிய அளவில் ஏற்படுவதற்கு முன், சரிசெய்ய வேண்டும்.
உறுதி தன்மையில் சந்தேகம்
நுாறடிச்சாலை மேம்பாலம் மற்றும் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் என்.ஆர்.காங்., ஆட்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, ரயில்வே இணை அமைச்சராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே மூலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
பாலத்தின் மேற்பகுதி கான்கிரீட் உடைந்து 11 முறை இரும்பு கம்பிகள் வெளியே தெரியந்தது. அதனால் சிமெண்ட் தளம் மீது தார் சாலை அமைத்து மூடினர்.
தற்போது இணைப்பு சாலை இணையும் இரு பக்கத்திலும் விரிசல் விழுந்துள்ளது ஒட்டுமொத்த பாலத்தின் உறுதி தன்மை மற்றும் கட்டுமான தரத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.