ADDED : அக் 29, 2024 06:15 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பேஸ்புக் மூலம் பழகிய சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
காரைக்கால் தலத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல் அகமது, 21;இவர் தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 16வயது சிறுமி பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். காலப்போக்கில் இருவரும் தனிமையில் சந்தித்து நெருங்கி பழங்கிவந்தனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்துல் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
