/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெறி நாய் கடித்து சிறுவன் காயம்
/
வெறி நாய் கடித்து சிறுவன் காயம்
ADDED : ஜூலை 04, 2025 02:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி கோவிந்தசாலை புது தெரு பகுதியில் வெறி நாய் கடித்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி, கோவிந்த சாலை, புது தெரு பகுதியில் வெறி நாய் கடித்து 7 வயது சிறுவன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., சிறுவனை பார்த்த ஆறுதல் கூறி, விரைவாக சிகிச்சை அளிக்க டாக்டரிடம் கேட்டுக் கொண்டார்.
நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், 'உருளையான்பேட்டை தொகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க பலமுறை நகராட்சிக்கு வேண்டுகோள் வைத்தும், அவர்களின் அலட்சியத்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்' என்றார்.
தொடர்ந்து, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.