/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்
/
மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்
ADDED : அக் 20, 2024 05:08 AM
புதுச்சேரி : கட்டுமான பணி மேற்கொண்ட சிறுவன், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்ததார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது ஷபிகுல் இஸ்லாம், 34; கொத்தனார். இவர், புதுச்சேரி, சாரம் பகுதியில் தங்கி, ஒப்பந்ததாரர் நடராஜனிடம், கட்டமான பணி செய்து வருகிறார். இவரது மகன் தசிக்குல் இஸ்லாம்,12;
இவர், நேற்று வேல்ராம்பட்டில் கட்டுமான பணி நடந்த இடத்தில், இரும்பு கம்பியை எடுத்து விளையாடியபோது, அருகில் சென்ற மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது.
படுகாயமைடந்த தசிக்குல் இஸ்லாம், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார், போதிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் வேலை வாங்கியதாக ஒப்பந்ததாரர் நடராஜன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.