தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் ஒயர் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

 மின் ஒயர் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்

 மின் ஒயர் அறுந்து விழுந்து சிறுவன் படுகாயம்


ADDED : ஜூன் 05, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் மின் ஒயர் அறுந்து விழுந்து, தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் படுகாயமடைந்தார்.

முதலியார்பேட்டை, ஜெயமூர்த்தி ராஜா நகர், கலைவாணி வீதியில் நேற்று முன்தினம் ஒருவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது அவ்வழியாக சென்ற மின் ஒயர் அறுந்து விழுந்தது.

இதில் ஸ்கூட்டரில் செ ன்ற தந்தை, மகன் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த சிறுவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின் ஒயரை சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us