ADDED : ஆக 10, 2025 08:47 AM
பாகூர், :பாகூரில் விளையாடிக் கொண்டிருந்த 15க்கும் மேற்பட்ட சிறுவர்களை, குளவிகள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகூரில் உள்ள பிடாரி அம்மன் கோவில் பகுதியில் நேற்று மாலை ஏராளமான சிறுவர்கள் விளையாடினர். அங்கு ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து திடீரென குளவிகள் வெளியேறி, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கொட்டியது.
அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அலறியடித்து ஓடினர். குளவிகள் விரட்டி சென்று, சிறுவர்களை கொட்டியது.
குளவி கொட்டியதில் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்த பொது மக்கள், அவர்களை மீட்டு, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், பாகூர் பேட் பகுதியை சேர்ந்த சதாசிவம், 14; துஷன், 15; அரவிந்தன், 14; நிதிஷ், 14; ஆகிய 4 சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூல ம் அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

