sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.பி.எல்., கிரிக்கெட்போட்டி: காரைக்கால் அணி வெற்றி

/

பி.பி.எல்., கிரிக்கெட்போட்டி: காரைக்கால் அணி வெற்றி

பி.பி.எல்., கிரிக்கெட்போட்டி: காரைக்கால் அணி வெற்றி

பி.பி.எல்., கிரிக்கெட்போட்டி: காரைக்கால் அணி வெற்றி


ADDED : ஜூலை 13, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் நேற்று காரைக்கால் நைட்ஸ் அணி வெற்றி பெற்றது.

பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த 12வது லீக் போட்டியில், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி - காரைக்கால் நைட்ஸ் அணி மோதின. முதலில் விளையாடிய ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் ஆனந்த் பயஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய காரைக்கால் நைட்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து, 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்த அணியின் முஹமது ஜவாத் 38 பந்துகளில் 55 ரன் எடுத்தார். அங்கித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார்.

அங்கித் சர்மாவுக்கு பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளர் சந்திரன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.

மாலை 6:00 மணியளவில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய மாகே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 142/8 எடுத்தது. அடுத்து வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணிவிளையாடியது.

இன்று பிற்பகல் 2:00 மணிக்கு நடக்கும் போட்டியில் காரைக்கால் கிங்ஸ் அணியும் - ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும், மாலை 6:00 மணிக்கு வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும் - ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.






      Dinamalar
      Follow us