/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம்
/
பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : பிப் 08, 2026 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் பிராமண சமுதாய மக்களின் கலந்தாய்வு கூட்டம், அபிராமி ஓட்டலில் நடந்தது.
வரும் சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி பா.ஜ., சார்பில், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிராமண சமுதாய மக்களின் கலந்தாய்வு கூட்டம், அண்ணா சாலையில் உள்ள அபிராமி ஓட்டலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கலந்தாய்வு கூட்டத்தில் புதுச்சேரி வாழ் பிராமண சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வழக்கறிஞர் பட்டாபிராமன், நடராஜன், ராஜன், சீதாராமன், சந்திரசேகரன், பாலு, ரவிச்சந்திரன், கணேசன், லலிதா வரதராஜன், சாவித்ரி வேதராமன், அலமேலு சுப்புராயன், டாக்டர் புவனா வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர். ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் கோவேந்தன் கோபதி, பொறியாளர் ரமேஷ், தயாளு சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.

