/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பாடத்தில் மூளை ஆரோக்கியம் கல்வியை சேர்க்க வேண்டும்'
/
'பாடத்தில் மூளை ஆரோக்கியம் கல்வியை சேர்க்க வேண்டும்'
'பாடத்தில் மூளை ஆரோக்கியம் கல்வியை சேர்க்க வேண்டும்'
'பாடத்தில் மூளை ஆரோக்கியம் கல்வியை சேர்க்க வேண்டும்'
ADDED : நவ 19, 2025 06:41 AM

புதுச்சேரி: துவக்க கல்வி பாடத்திட்டத்தில் மூளை ஆரோக்கியம் குறித்து அடிப்படை கல்வி அறிவை சேர்க்க வேண்டும் என, பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேசினார்.
மைசூர் ஜே. எஸ். எஸ்., மருத்துவக் கல்லுாரி சார்பில், மூன்று நாட்கள் சர்வதேச மாநாடு நடந்தது.
அதில், அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து வல்லுநர்கள் சி.எஸ்.ஐ.ஆர்., நிம்ஹன்ஸ், ஐ.ஐ.டி., மெட்ராஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டு துவக்க விழாவில், பங்கேற்ற புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேசுகையில், 'உடலில் பிற உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை பெரும்பாலும் நிர்வகிக்க முடியும், ஆனால் மூளை பாதிப்பு ஏற்படும் போது, எல்லாம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக முதுமை அடைந்து, சராசரி ஆயுட்காலம் 78 ஆண்டுகளாக நெருங்கியுள்ளது.
ஆரோக்கியமான மூளை செயல்பாட்டில் வேரூன்றிய நீண்ட ஆயுளை உறுதி செய்வதில் நாடு தனது கவனத்தை மாற்ற வேண்டும். மூளை ஆரோக்கியம் குறித்து, ஆரம்பக் கல்வி பாடத் திட்டத்தில் அடிப்படைகல்வி அறிவை சேர்க்க வேண்டும்' என்றார்.

