/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி பொதுத்தேர்வுகளில் அபாரம்
/
பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி பொதுத்தேர்வுகளில் அபாரம்
ADDED : மே 22, 2025 04:00 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மதகடிப்பட்டு பிரைனி ப்ளூம்ஸ் கான்செப்ட் மேல்நிலைப் பள்ளியில் 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு எழுதிய, 22 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 450க்கு மேல் 8 பேரும், 400க்கு மேல் 8 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 22 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 550க்கு மேல் 2 பேரும், 500க்கு மேல் 9 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை அரவிந்த் கல்விக் குழுமத்தின் தலைவர் அருண்குமார், பள்ளியின் துணை சேர்மன் திவ்யா அருண்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.