/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பால் சொசைட்டிக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
/
பால் சொசைட்டிக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
பால் சொசைட்டிக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
பால் சொசைட்டிக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஜன 30, 2025 06:41 AM
பாகூர்: பாகூரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் புகுந்து உதவியாளரை தாக்கி, பொருட்களை சூறையாடிய 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன், 28; பாகூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையின் போது இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
கடந்த 26ம் தேதி மணிமாறன் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பணியில் இருந்த போது, பாகூரை சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே புகுந்து அவரை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியால் வெட்ட முயன்று, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்த பால் அளவை இயந்திரம் மற்றும் கேன்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த மணிமாறன், பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார், பிரவின், மற்றும் அவரது நண்பர்களான முரளி, புவனேஷ், சுரேந்தர், குரு, முத்து, நரேஷ், விஷ்ணு, நவீன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பாகூரில் தாலுகா அலுவலம் எதிரே உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பட்டபகலில் புகுந்து ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலை தலங்களில் வைராகி வருகிறது.

