/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
/
மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
ADDED : நவ 15, 2025 05:22 AM

புதுச்சேரி: ரோட்டரி, மண்டலம்-5 சார்பில் பெண் களுக்கான மார்பகப் புற்றுநோய் இலவ ச பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் முதலியார்பேட்டை பாரதி மில் வீதியில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
உதவி கவர்னர் கந்தன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலை பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ரத்ததானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி லெக்சி, ஆரோ சிட்டி, மரினா, பீனிக்ஸ், விஷன் ஆகிய ரோட்டரி கிளப்புகளின் தலை வர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

