/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்
/
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்
ADDED : நவ 19, 2025 08:05 AM

புதுச்சேரி: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம் என, தேசிய சிசு வார விழாவில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின்படி கடந்த 15ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை தேசிய சிசு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனையொட்டி, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று தேசிய சிசு வாரவிழா கொண்டாடப்பட்டது.
விழாவை சுகாதாரத்துறை செயலர் சவுத்ரி முகமது யாசின் துவக்கி வைத்தார். மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஐயப்பன் வரவேற்றார்.
துணை இயக்குநர் ஆனந்தலட்சுமி சிசுக்களின் பாதுகாப்பு- 'ஒவ்வொரு தொடுதலிலும், ஒவ்வொரு முறை யும், ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பேசினார்.
அப்போது, பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த சிசு பராமரிப்பின் முக்கிய அம்சங்களான தோலுடன் தோல் தொடர்பு, பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பாலுாட்டுவது, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தேசிய சிசு வாரத்தின் செயல் திட்டத்தை மருத்துவமனையின் குழந்தை நலப்பிரிவு தலைமை மருத்துவர் அனுராதா விளக்கினார்.
அப்போது, 2024--2025ம் ஆண்டில் 11,638 பிறந்த குழந்தைகளில் 11,006 குழந்தைக்கு, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டியதால் மாநிலத்தில் பிறந்த குழந்தை இறப்பு 4.98 ஆக உள்ளது, என்றார்.
விழாவில், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள், துணை இயக்குநர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரோசரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

