/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது
/
விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது
விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது
விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது
ADDED : அக் 26, 2025 03:23 AM
திருக்கனுார்: திருபுவனையில், விவசாய மின் இணைப்புக்கு ரூ. 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, செல்லிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் பூபதி ராஜா,32; போலீஸ்காரர். இவர், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கோரி, திருபுவனை மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தில், உதவி பொறியாளர் கையெழுத்திட்டு, வாதானுார் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பினார். அங்கு, விண்ணப்பத்தை ஆய்வு செய்த இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனையொட்டி பூபதிராஜா கடந்த 23ம் தேதி இளநிலை பொறியாளரை நேரில் சந்தித்தபோது, அவர், ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதில், முதற்கட்டமாக ரூ.9 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்ட பூபதி ராஜா, இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, நேற்று காலை 11:00 மணிக்கு வாதானுார் மின்துறை அலுவலகத்துக்கு சென்ற பூபதிராஜா, பொறி யாளர் ராஜேந்திரனிடம் ரூ.9 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர். பின், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லஞ்ச வழக்கில் சிக்கிய ராஜேந்திரன், வரும் நவம்பரில் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

