/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி திருமணம் கொத்தனார் கைது
/
சிறுமி திருமணம் கொத்தனார் கைது
ADDED : நவ 24, 2025 06:22 AM
அரியாங்குப்பம்: கல்லுாரி மாணவியை திருமணம் செய்த,கொத்தனாரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் 17 வயது மாணவி; கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவரை காணவில்லை. இது குறித்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
இந்நிலையில், மாணவியை பரங்கிப்பேட்டையை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் சிவக்குமார் மகன் விஷ்வா, 20, என்பவர் அழைத்து சென்றது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்தனர். மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி, அவரிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்து சென்று, கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

