sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாய்க்காலில் விழுந்து கொத்தனார் சாவு

/

 வாய்க்காலில் விழுந்து கொத்தனார் சாவு

 வாய்க்காலில் விழுந்து கொத்தனார் சாவு

 வாய்க்காலில் விழுந்து கொத்தனார் சாவு


ADDED : ஏப் 25, 2026 09:11 PM

Google News

ADDED : ஏப் 25, 2026 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம், 46; கொத்தனார். குடிபழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் மாலை மனைவி வேளாங்கண்ணியுடன் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். இதையடுத்து, ஒத்தவாடை வீதி - அம்பேத்கர் சாலை சந்திப்பில் உள்ள வாய்க்கால் அருகே செல்வம் மது போதையில் அமர்ந்திருப்பதாக, அக்கம் பக்கத்தினர் அவரது மகன் மணிமாறனிடம் தெரிவித்தனர்.

தந்தை வழக்கம்போல் வீட்டிற்கு வந்துவிடுவார் என எண்ணி மணிமாறனும் வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் நேற்று காலை வரை செல்வம் வீட்டிற்கு வராதால் மனிமாறன் தனது தாயாருடன் அங்கு சென்று பார்த்தார். வாய்க்காலில் செல்வம் குப்புற விழுந்து இறந்து கிடந்தார்.

புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us