/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்
/
மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்
ADDED : பிப் 16, 2026 07:02 AM
அரியாங்குப்பம்: கட்டடத்தில் பூச்சு வேலை செய்யும் போது, உயரழுத்த மின்சாரம் தாக்கி கொத்தனார் படுகாயமடைந்தார்.
அரியாங்குப்பம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 53; கொத்தனார். அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில்அன்பரசன் என்பவரின் கட்டடத்தின் சுவரை, பூசுவதற்கு, சாரம் அமைத்து, கடந்த 26ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரம் அவர் மீது தாக்கியதில், அவர் துாக்கியெறிப்பட்டார்.
கீழே விழுந்த அவர் கால் எலும்பு முறிந்தது. அங்கிருந்தவர்கள் மூலம் அவர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
எவ்வித பாதுகாப்பு இல்லாமல், வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி விஜயகுமாரி அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

