/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருகே பாலம் உள்வாங்கிய;து கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் 'கட்'
/
புதுச்சேரி அருகே பாலம் உள்வாங்கிய;து கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் 'கட்'
புதுச்சேரி அருகே பாலம் உள்வாங்கிய;து கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் 'கட்'
புதுச்சேரி அருகே பாலம் உள்வாங்கிய;து கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் 'கட்'
ADDED : டிச 05, 2024 07:03 AM
புதுச்சேரி; வெள்ளப் பெருக்கு காரணமாக துண்டிக்கப்பட்ட கடலுார்- புதுச்சேரி சாலை போக்குவரத்து மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் துவங்கியது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு இடையார்பாளையம் பாலம் உள்வாங்கியதால் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாத்தனுார் அணை கடந்த 1ம் தேதி நள்ளிரவு திறக்கப்பட்டது. இதனால், கடலுார் தென்பெண்ணையாற்றில் கடந்த 2ம் தேதி 21.50 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.
அன்று மாலை கடலுார்-புதுச்சேரி சாலையும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் கடலுார்-புதுச்சேரி இடையே கூடுதலாக 10 கி.மீ., பயணம் செய்தனர்.
நேற்று மதியம் கடலுார்-புதுச்சேரி சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடியத் துவங்கியதால், மாலை 3:00 மணிக்கு பிறகு கடலுார்-புதுச்சேரி இடையே நேரடி போக்குவரத்து துவங்கியது.
இந்நிலையில் இச்சாலையில் நேற்று இரவு 8:௦௦ மணிக்கு, தவக்குப்பம் அடுத்த இடையாஞ்சாவடி ஓடைப்பாலம் உள்வாங்கியது.
இதனால், புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.
அதனையொட்டி, தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.