/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிட்டன் பிரதிநிதிகள் அமைச்சருடன் சந்திப்பு
/
பிரிட்டன் பிரதிநிதிகள் அமைச்சருடன் சந்திப்பு
ADDED : டிச 23, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிரிட்டன் தலைமையிடமாக கொண்ட பிரக்யா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் வார்வாட்கர், இணை நிறுவன அதிகாரி குஷால் வார்வாட்கர், இந்திய முதலீடு மற்றும் வணிக ஆலோசகர் சதீஷ் சந்திரன் ஆகியோர், சட்டசபையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையில் பிரக்யா நிறுவனம், புதுச்சேரியில் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து விவரித்தனர்.
சந்திப்பில் ரமேஷ் எம்.எல்.ஏ., புதுச்சேரி தொழில்நுட்ப துறை செயலர் சவுத்திரி முகமது ஆகியோர் உடனிருந்தனர்.

