பி.எஸ்., விநாயகா மிஷன் பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
பி.எஸ்., விநாயகா மிஷன் பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : மே 16, 2026 10:06 PM
ADDED : மே 16, 2026 10:01 PM
புதுச்சேரி:விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுார் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் கண் ஒளியியல் பிரிவு மாணவர்களுக்காக, சென்னையை சேர்ந்த பார்வை மற்றும் கண் அறுவை சிகிச்சை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, கல்லுாரி டீன் செந்தில்குமார் கூறியதாவது:
கல்லுாரியில் கண்ணொளியியல் பிரிவு மாணவர்களின் தொழில் சார்ந்த பல்வேறு திறனை கல்வியுடன் இணைத்து மேம்படுத்தும் நோக்கில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளோம். இதன் மூலம் கண்ணொளியியல் பிரிவு மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சி அவர்களுக்கான கருத்தரங்குகள் செயல்முறை பயிற்சி வகுப்புகள், இணைவு ஆராய்ச்சி, மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புக்கான மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கண் பராமரிப்பு, மறுவாழ்வு, விளையாட்டு பார்வை சிகிச்சை ஆகிய துறைகளில் உள்ள பல்துறை சுகாதாரப் பயிற்சிகள் ஆகியவற்றை அளிக்கும் வகையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டுள்ளது' என்றார்.
ஒப்பந்தத்தில் கல்லுாரியின் டீன் செந்தில்குமார், சென்னை பார்வை மற்றும் கண் அறுவை சிகிச்சை மையத்தின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் லிபிகா ராய் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் கண்ணொளியியல் பிரிவின் பொறுப்பாளர் தமிழ் சுடர் செய்தார்.
