sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., 4 நாட்கள் சிறப்பு மேளா : அதிரடி சலுகை

 பி.எஸ்.என்.எல்., 4 நாட்கள் சிறப்பு மேளா : அதிரடி சலுகை

 பி.எஸ்.என்.எல்., 4 நாட்கள் சிறப்பு மேளா : அதிரடி சலுகை


ADDED : பிப் 24, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சார்பில் நடக்கும் நான்கு நாட்கள் சிறப்பு மேளாவில் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சார்பில் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது. மேட்டுப்பாளையம், ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார்கோவில், அரியாங்குப்பம் தேவாலயத்திற்கு அருகில், கரியமாணிக்கம், வில்லியனுார் சங்கர வித்யாலயா பள்ளி எதிரில், ஆர்.டி.ஓ ஆபிஸ் அருகில், ஆரியபாளையம், மடுகரை, திருக்கனூர், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜிவ் பார்க் எதிரில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் அருகில் கரிகலாம்பாக்கம், வில்லியனூர் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​முகாமில் ரூ. 289 மதிப்புள்ள சிம் கார்டு, வெறும் ரூ.150-க்கு கிடைக்கும். 35 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 2ஜிபி டேட்டா வசதி உண்டு. பழைய 2ஜி/3ஜி சிம் கார்டுகளை இலவசமாக 4ஜி-க்கு மாற்றிக்கொள்ளலாம். கூடவே 4 ஜிபி டேட்டா இலவசம். உங்கள் சிம் 4ஜி தானா என அறிய 9442824365 என்ற எண்ணிற்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் போதும். பி.எஸ்.என்.எல்., எப்.டி.டி.எச்., திட்டமான 'ஸ்பார்க்' அதிவேக இணைய சேவை வெறும் ரூ.399 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.​கூடுதல் விபரங்களுக்கு 1800-4444 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us