/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 02, 2025 10:54 PM

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
அகில இந்திய பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதன்மை பொது மேலாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியதாரர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தின்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.டி., ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வூதிய பலன் தராமல் இழுத்தடித்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.ஓய்வூதியதாரர்களின் அனைத்து பிரச்னைகளையும் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.