/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாளை பி.எஸ்.என்.எல்., குறை தீர்வு முகாம்
/
நாளை பி.எஸ்.என்.எல்., குறை தீர்வு முகாம்
ADDED : அக் 31, 2025 02:14 AM
புதுச்சேரி:  முதன்மை பொது மேலாளர் திலகவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், கடந்த 27ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நாளை (1ம் தேதி) காலை 10:00 மணி முதல் 1:30 மணி வரை, ரங்கப்பிள்ளை தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தில் நடக்கிறது.
வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சேவைகள் தொடர்பான சந்தேகங்கள், குறைகள் மற்றும் பரிந்துரைகளை முகாமில் நேரடியாக தெரிவிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

