ADDED : மார் 14, 2026 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட்டில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு தொடர்பான லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) வரும் 6ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிற து.
இதில், நிலுவைத் தொகை செலுத்தாததால் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது இணைப்பை மீண்டும் பெறலாம்.
மேலும், பி.எஸ்.என்.எல்., நிலுவையில் உள்ள தொகையை முறைப்படுத்தி தள்ளுபடி விலையில் தொகையை செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் இணைப்பை பைபர் இணைப்புகளாகவும் மாற்றலாம். இதில், கட்டணம் செலுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பி.எஸ்.என்.எல்., சிறந்த சேவைகளை எப்போதும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

