/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., அவுட்சோர்ஸ் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் திறப்பு
/
பி.எஸ்.என்.எல்., அவுட்சோர்ஸ் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் திறப்பு
பி.எஸ்.என்.எல்., அவுட்சோர்ஸ் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் திறப்பு
பி.எஸ்.என்.எல்., அவுட்சோர்ஸ் கஸ்டமர் சர்வீஸ் சென்டர் திறப்பு
ADDED : அக் 20, 2025 12:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அவுட் சோர்ஸ் செய்யப்பட்ட கஸ்டமர் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடந்தது.
நிறுவனத்தின் துணை பொது மேலாளர் திலகவதி திறந்து வைத்தார்.
அவர், கூறுகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அவுட்சோர்ஸ் கஸ்டமர் சர்வீஸ் சென்டரில் புதிய சிம் விற்பனை, புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, மொபைல் நம்பர் போ ர்டலிலிட்டி, கட்டணம் செலுத்துதல், ரீ சார்ஜ் மற்றும் பணம் செலுத்தாத இணைப்புகளை மீண்டும் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. தினசரி காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
தீபாவளியை முன்னிட்டு வெறும் ரூ. 1 செலுத்துவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் பிரீபெய்ட் மொபைல் இணைப்பை பெறலாம்.
இதில், 30 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை வரும் 15ம் தேதி வரை மட்டுமே.
ரூ. 485 மற்றும் 1999 திட்டங்களில் 5 சதவீதம் பண்டிகை சலுகை வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., செல்ப் கேர் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் லேண்ட்லைன் மற்றும் எப்.டி.டி.எச்., சேவைகள், ரீ சார்ஜ், கட்டணம் செலுத்துதல் மற்றும் புகார் பதிவு போன்ற செயல்களை எளிதாக பெறலாம் என, தெரிவித்தார். இதில், பி.எஸ்.என்.எல்., அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.