sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா புதுச்சேரியில் இன்று சிறப்பு முகாம்

/

பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா புதுச்சேரியில் இன்று சிறப்பு முகாம்

பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா புதுச்சேரியில் இன்று சிறப்பு முகாம்

பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா புதுச்சேரியில் இன்று சிறப்பு முகாம்


ADDED : செப் 30, 2025 11:58 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (1ம் தேதியன்று) மேளா விற்பனை முகாம், புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிரே நடக்கிறது.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு:

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழாவை கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று 1ம் தேதியன்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மேளா சிறப்பு விற்பனை முகாம், புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவன வளாகம் எதிரே நடக்கிறது.

பி.எஸ்.என்.எல்., புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ. 100க்கு வழங்கப்படும். இதில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4ஜிபி இலவச டேட்டாவை பெறலாம்.

225 எஸ்.டி.வி., பிளான் அறிமுகம் செய்து, 30 நாட்களுக்கு தினமும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லா அழைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். மொபைல் வாடிக்கையாளர்கள் தற்போது பி.ஐ.டி.வி., சேவையை பெறலாம்.

அதோடு ஓ.டி.டி., பிளே சேவைகளும் இணைந்து வழங்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., எப்.டி.டி ஹெச்., மூலம் 30 எம்.பி.பீ.எஸ்., முதல் 300 எம்.பி.பீ.எஸ்., வரை வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படுகிறது.

ஸ்கைப்புரோ ஐ.பி.டி.வி., பிளஸ் மூலம் ஐ.எப்.டி.வி., பிரிமியம் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . எப்.டி.டி ஹெச்., திட்டம் ஓ.டி.டி., சேவைகளுடன் விடியோ ஸ்ட்ரீமிங், 1000+ சேனல்கள், ஹெச்.டி., திரைப்படங்கள், ஆன்லைன் கல்வி போன்ற சேவைகளை வழங்குகிறது.

புதிய பி.எஸ்.என்.எல்., செல்ப்கேர் செயலியில் மொபைல், லேண்ட்லைன் மற்றும் எப்.டி.டி ஹெச்., சேவைகள் எளிதாக நிர்வகிக்க முடியும். செல்ப்கேர் செயலியில் தனிப்பயன் டாஷ்போர்டு, ரீசார்ஜ் & பில்லிங், டி.என்.டி. நிர்வாகம் மற்றும் புகார் பதிவு போன்ற அம்சங்கள் உள்ளன.

மொபைல் வாடிக்கையாளர்கள் 1800-4444 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் 'HI' என அனுப்பி, கணக்கு விவரங்கள், பில்லிங், ரீசார்ஜ், புதிய திட்டங்கள், எப்.டி.டி ஹெச்., 4ஜி சேவைகள் மற்றும் புகார் உதவிகளை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us