தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை துவக்கம்


ADDED : மே 04, 2025 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை மேளா முகாம் நாளை (5ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.

முதன்மை பொது மேலா ளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை மேளா முகாம் நாளை (5ம் தேதி) முதல் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், கனகசெட்டிக்குளம், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மேளாவில் 148 மதிப்புள்ள சிம்கார்டு 50 மட்டுமே. இந்த சிம்காட்டில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசமாக பெறலாம்.

289 ரூபாய் மதிப்புள்ள சிம் கார்டு 100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசமாக பெறலாம்.

எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல், நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு 108 ரூபாய் ரீசார்ஜூடன் சிம் கார்டு இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றிய விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், எப்.டி.டி.எச்., மறு இணைப்பு மற்றும் நிலுவைத் தொகையை தள்ளுபடி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வில்லியனுார், மேட்டுப்பாளையம் மையங்களில் நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us