தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : மே 29, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம், இன்று (29ம் தேதி) துவங்கி 31ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த முகாம், மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் கரியமாணிக்கம், திருக்கனுார், ஏம்பலம், சஞ்சீவி நகர், திருபுவனை கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜ் பார்க் எதிரில், மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலையம், மற்றும் எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

முகாமில், 289 ரூபாய் மதிப்புள்ள புதிய சிம் கார்டு 100 ரூபாய் மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., அளவில்லாமல் அழைப்புகள் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4 ஜி சிம் கார்டுதானா என விபரம் அறிந்து கொள்ள, 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

கே.ஒ.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் முகாம் நடக்கும் இடங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். புதிய 4ஜி- சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us