பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் :புதுச்சேரியில் துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் :புதுச்சேரியில் துவக்கம்
ADDED : ஏப் 14, 2026 06:58 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்குகிறது.
பொதுமேலாளர் பாலச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல். சிறப்பு மேளா விற்பனை முகாம் (15ம் தேதி) முதல் வரும் 18ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், கனகசெட்டிக்குளம், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், ஆனந்தா இன் அருகில், திருவண்டார்கோவில், ஆரியப்பாளையம், மடுகரை, கரிகலாம்பாக்கம், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மேளாவில் 4ஜி சேவையை ஊக்குவிக்க வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1க்கு சிம் கார்டு வழங்கப்படுகிறது. இந்த சிம்காட்டில் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் இலவசம். இந்த சலுகையை பொதுமக்கள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள், அனைத்து ரீட்டைலர் கடைகள், வில்லியனுார், மேட்டுப்பாளையம், மெயின் தொலைபேசி நிலைய வாடிக்கையாளர்கள் சேவை மையங்களிலும் பெற்று கொள்ளலாம்.
வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டு விபரங்களை 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை புதிய 4ஜி சிம் கார்டுகளாக இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜி.பி., இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல்., புதிய எப்.டி.டி.எச் திட்டமான அதிவேக இணையத்தை வெறும் ரூ. 449 அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
