/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
ADDED : மே 17, 2025 11:25 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை (19ம் தேதி) துவங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை (19ம் தேதி) முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், கனகசெட்டிக்குளம், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மேளாவில் ரூ.289 மதிப்புள்ள சிம் கார்டு ரூ.100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம்.
வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
கே.ஓய்.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தாங்களிடம் உள்ள குறுச்செய்தியுடன் மேளா நடக்கும் இடத்தை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். மேலும் புதிய 4 ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.