தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்


ADDED : ஜூன் 22, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் புதுச்சேரியில் நான்கு நாட்கள் நடக்கிறது.

பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் வரும் நாளை 23ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், வில்லியனுார், மதகடிபட்டு, முதலியார்பேட் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், திருக்கனுார், ஏம்பலம், சஞ்சீவி நகர், அரும்பார்த்தபுரம், திருபுவனை, கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜூவ் பார்க் எதிரில், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ. 100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எம்.எம்.எஸ்., அளவில்லாமல் அழைப்புகள் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4ஜி சிம் கார்டு தானா என விபரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் எப்.டி.டி.எச்., மறு இணைப்பு மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடியில் வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி வில்லியனுார், மேட்டுப்பாளையம் மையங்களில் நடைபெறும்.

கே.ஒய்.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் மேளா நடைபெறும் இடங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜி.பி., இலவச டேட்டாவும் கிடைக்கும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us