தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

 பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

 பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்


ADDED : மார் 08, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை 9ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. முகாம் மேட்டுப்பாளையம் ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார்கோவில், வில்லியனுார், கரியமாணிக்கம், ராஜிவ் காந்தி மருத்துவமனை அருகில், வில்லியனுார் சங்கர் வித்யாலயா பள்ளி எதிரில், ஆரியபாளையம், மடுகரை, திருக்கனுார், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜூவ் பார்க் எதிரில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் அருகில், கரிகலாம்பாக்கம், வில்லியனுார் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

முகாமில் ரூ.289 மதிப்புள்ள சிம் கார்டு ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், 35 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா,100 எஸ்.எம்.எஸ்., அளவில்லா அழைப்புகள் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4ஜி சிம் கார்டுதானா என, விபரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட இடங்களில் உங்களது 2ஜி, 3ஜி, சிம் கார்டை புதிய 4ஜி சிம்மாக இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டா பெறலாம்.

பி.எஸ்.என்.எல்., புதிய எப்.டி.டி.எச்., திட்டமான ஸ்பார்க் உடன் அதிவேக இணையத்தை வெறும் ரூ.399 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் செய்யவும் அல்லது 18004444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us