தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம்; புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம்; புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம்; புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : மார் 06, 2024 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம், இன்று துவங்குகிறது.

பி.எஸ்.என்.எல் முதன்மை மேலாளர் செய்திக்குறிப்பு: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று துவங்குகிறது. இந்த முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் நிலையம் அலுவலகம் அருகில், ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனை எதிரில், திருக்கனுார், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், வில்லியனுார் மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய, தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு லேண்ட்லைன்எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.

அதற்கான மோடம் இலவசம். புதிய எப்.டி.டி.எச்., இணைப்பு ரூ.329 முதல் கிராமப்புறங்களில், ஆறு மாதங்களுக்கு, ரூ.999.,க்கு கிடைக்கும்.

ரூ.269 மதிப்புள்ள சிம் கார்டு ரூ.50.,க்கு கிடைக்கிறது.இதில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா, அளவில்லா அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். பிற நெட்வொர்க்கில் இருந்து எம்.என்.பி மூலம், பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு ரூ.269 மதிப்புள்ள சிம் இலவசம். தற்போதுள்ள, 2 ஜி மற்றும் 3 ஜி சிம் வைத்திருப்பவர்கள், 4 ஜி, சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.வரும், 9ம் தேதி, முகாம் நிறைவு பெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us