தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் இன்று துவக்கம்

 பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் இன்று துவக்கம்

 பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : நவ 24, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா இன்று துவங்குகிறது.

முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை மேளா இன்று (24ம் தேதி) முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

மேட்டுப்பாளையம், எஸ்.வி.பட்டேல் சாலை ஆனந்தா இன் அருகில், பாகூர், ராஜிவ்காந்தி மருத்துவமனை, மடுகரை, உறுவையாறு, கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், சஞ்சீவி நகர், ஆரியப்பாளையம், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், வில்லியனுார் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மேளாவில் ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ.100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 35 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். வருடாந்திர பிளானாக ரூ. 2399 அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் வரம்பற்ற அழைப்புகள் இலவசம்.

மேலும் புதிய 4 ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us