sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா

பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா

பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா


ADDED : ஜூலை 27, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 12:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

மேளா மேட்டுப்பாளையம், வில்லியனுார், மதகடிபட்டு, முதலியார்பேட் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், திருக்கனுார், சஞ்சீவி நகர், சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில், மரப்பாலம், அஜிஸ் நகர், பாகூர், திருபுவனை, கோட்டகுப்பம் இந்தியன் வங்கி அருகில், லாஸ்பேட் ராஜூவ் பார்க் எதிரில், ரங்கபிள்ளை வீதி, பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

முகாமில், ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ. 80 மட்டும். இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும், அளவில்லா அழைப்புகள் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4 ஜி சிம் கார்டுதானா என விபரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் எப்.டி.டி.எச். மறு இணைப்பு மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடியில் வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் மையங்களில் நடைபெறும். கே.ஒய்.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தாங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் மேளா நடைபெறும் இடங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும்.

புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us