பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை; மேளா புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை; மேளா புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
ADDED : பிப் 15, 2026 06:38 AM
புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை துவங்குகிறது.
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு;
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்ப னை மேளா நாளை (16ம் தேதி) முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது .
முகாம், மேட்டுப்பாளையம், ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து எதிரில், திருவண்டார்கோவில், வில்லியனூர், கரியமாணிக்கம், ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், ஆரியப்பாளையம், மடுகரை, திருக்கனூர், கோட்டக்குப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க் எதிரில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் அருகில், கரிக்கலாம்பாக்கம், வில்லியனுார் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இதில், 289 ரூபாய் மதிப்புள்ள சிம் கார்டு 150 ரூபாய் மட்டுமே. இந்த சிம் கார்டில் 35 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம் கார்டு, 4ஜி சிம் கார்டு தானா என, அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன், 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெறலாம். பி.எஸ்.என்.எல்., புதிய எப்.டி.டி.ஹச்., திட்டமான ஸ்பார்க் உடன் அதிவேக இணையத்தை வெறும் 399 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும் அல்லது 18004444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
