ADDED : மார் 16, 2025 07:30 AM
புதுச்சேரி; பி.எஸ்.என்.எல்., சிற்பபு விற்பனை மேளா முகாம் நான்கு நாட்கள் நடக்கிறது.
பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. முதலியார்பேட்டைபோஸ்ட் ஆபிஸ் அருகில், கரியமாணிக்கம், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், மதகடிபட்டு, கனகசெட்டிக்குளம், திருக்கனுார், பாகூர், ஏம்பலம், வில்லியனுார் கொம்யூன் பஞ்ஜாயத்து அலுவலகம், கிருமாம்பாக்கம், ஜவகர் நகர், சுல்தான் பேட்டை மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
முகாமில் ரூ.128 மதிப்புள்ள சிம் கார்ட் 50 ரூபாய் மட்டுமே. இந்த சிம் கார்டில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். ரூ. 269 மதிப்புள்ள சிம் கார்ட் 100 ரூபாய் மட்டுமே, இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, 100 எம்.எம்ஸ்., அளவில்லாமல் அழைப்புகள் இலவசம்.
எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 108 முதல் ரீசார்ஜ் மற்றும் சிம் இலவசம்.
வாடிக்கையாளர் தங்களது சிம்கார்டுகள் விபரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம். இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே. புதிய 4 ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 GB இலவச டேட்டாவையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
