/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சேவை வழங்குவதற்கு உரிமம் பெற விண்ணப்பம் வரவேற்பு
/
பி.எஸ்.என்.எல்., சேவை வழங்குவதற்கு உரிமம் பெற விண்ணப்பம் வரவேற்பு
பி.எஸ்.என்.எல்., சேவை வழங்குவதற்கு உரிமம் பெற விண்ணப்பம் வரவேற்பு
பி.எஸ்.என்.எல்., சேவை வழங்குவதற்கு உரிமம் பெற விண்ணப்பம் வரவேற்பு
ADDED : டிச 01, 2024 04:21 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை வழங்குவதற்கான நேரடி உரிமம் பெற நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தின் புதுச்சேரி வர்த்தக பகுதிக்கு உட்பட்ட புதுச்சேரி மெயின், வில்லியனுார் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் வாடிக்கையாளர் சேவை மையங்களை அவுட்சோர்சிங் முறையில் சிம் கார்டு விற்பனை, ரீசார்ஜ் கூப்பன்கள், தொலைபேசி கட்டணம் வசூலிக்கும் வசதி, புதிய எப்.டி.டி.எச்., புக்கிங் மற்றும் மாறுதல், ஆதார் சேவை மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை வழங்குவதற்கான நேரடி உரிமம் பெற தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏலத்தில் பங்கு பெறுபவர் குறைந்தது ஒரு வருட வாடிக்கையாளர் சேவை மையம் நடத்திய அனுபவம் கொண்டிக்க வேண்டும். விருப்பமுள்ள நிறுவனங்கள் வரும் டிசம்பர் 16ம் தேதி மதியம் 4:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistcircle.aspx என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு உதவி பொது மேலாளர் - 94861 02812 மற்றும் துணை கோட்ட பொறியாளர் - 94861 06135 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

