கேள்வி நேரத்துடன் விரைவில் புதுச்சேரி சட்டசபை கூட்டப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி
கேள்வி நேரத்துடன் விரைவில் புதுச்சேரி சட்டசபை கூட்டப்படும் முதல்வர் ரங்கசாமி உறுதி
UPDATED : ஆக 25, 2026 05:22 PM
ADDED : ஆக 25, 2026 05:21 PM
கேள்வி நேரத்துடன் விரைவில் புதுச்சேரி சட்டசபை கூட்டப்படும்: முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி சட்டசபை அலுவல் பட்டியலை வாசிக்கத் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் சட்டசபையில் விவாதித்திற்கு எடுத்து கொள்ள துறைகளை பட்டியலிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நேரு எம்.எல்.ஏ., ''தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ஒதுக்கப்படவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேச வேண்டியிருப்பதால், அடுத்த மாதம் கேள்வி நேரத்துடன் கூடிய சட்டசபைக் கூட்டத்தை நடத்த சபாநாயகர் உறுதியளிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் செல்வம் அன்பழகன், ''அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவின்படியே சட்டசபை நாட்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. விரைவில் மீண்டும் சபை கூட்டப்படும். புதிய எம்.எல்.ஏக்கள் பேச கண்டிப்பாக வாய்ப்பளிக்கப்படும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ''தற்போது மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. விரைவில் சட்டசபையைக் கூட்டி, கேள்வி நேரத்துடன் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்தப்படும்'' எனத் தெளிவுபட உறுதி அளித்தார்.
