ADDED : ஆக 24, 2026 07:42 PM
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எரிப்பான் அமைக்கப்படும்
பொதுத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சிறந்த அரசு பள்ளிகளில் அதிநவீன நுாலக வசதிகள் ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் தளங்கள், மெய்நிகர் ஆய்வகங்கள் கொண்ட ‘விரிவான கல்வி தொழிலநுட்ப திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். உல்லாஸ் திட்டத்தின் கீழ், எழுத்தறிவற்ற நபர்கள் அடையாளம் கண்டு, கல்வி ஆதரவு வழங்கப்படும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எரிப்பான் நிறுவப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தொடர்ந்து வழங்கப்படும். பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். ஆசிரியர்களுக்கு சமீக்ஷா கேந்திரா மற்றும் மின்னணு மனிதவள மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு பணியிட மாறுதல்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலம் நடக்கும்.
2026–27 ம் ஆண்டில் பள்ளி கல்வி துறைக்காக ரூ.ஆயிரத்து 102.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
