தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்: தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 15.42 கோடி

பட்ஜெட்: தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 15.42 கோடி

பட்ஜெட்: தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 15.42 கோடி


ADDED : ஆக 24, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

* அரசுத் துறைகளில் தேசிய தகவல் மையத்தின் மின்னணு அலுவலக முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, பாரம்பரிய நடைமுறைகளை முழுமையான மின்னணு மற்றும் காகிதமில்லா நிர்வாக முறையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் அரசு உதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விரிவுபடுத்தப்படும். 

* புதுச்சேரியில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி தகவல் தொழில்நுட்ப இயக்குநரகத்தில் பிரத்யேக இணையப் பாதுகாப்பு பிரிவு நிறுவப்படும். இளைஞர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் 150 மாணவர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையுடன் 12 மாத காலத்திற்கான ‘டிஜிட்டல் பயிற்சி பணி வாய்ப்பு’ வழங்கப்படும். 

* இதற்காக, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 15.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us