தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாஸ்டர்ஸ் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு புதுவை மேற்கு, தெற்கு அணிகள் தகுதி

மாஸ்டர்ஸ் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு புதுவை மேற்கு, தெற்கு அணிகள் தகுதி

மாஸ்டர்ஸ் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு புதுவை மேற்கு, தெற்கு அணிகள் தகுதி


ADDED : பிப் 07, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் புதுவை மேற்கு, தெற்கு அணிகள் மோத உள்ளன.

நேற்று காலை 9:15 மணிக்கு நடந்த மாஸ்டர்ஸ் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், புதுவை மேற்கு அணி, புதுவை தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 120 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 31 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய தெற்கு அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 91 ரன்கள் எடுத்து 29 ரன்களில்தோல்வியை தழுவியது. மேற்கு அணியின் ராஜ்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில் மாகே அணி, ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய மாகே அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 66 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 69 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏனாம் அணியின் ஷ்ரவன் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில் காரைக்கால் அணி,புதுவை வடக்கு அணி மோதின. முதலில் ஆடிய புதுவை வடக்கு அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 91 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய காரைக்கால் அணி அதிரடியாக ஆடி 5.1 ஓவர்களில் 3 விக்கெட் 95 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் அணியின் மயில்வாகனன் 14 பந்துகளில் 42 ரன்களும், ராஜேஷ் 11 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் மயில்வாகனன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

13 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த புதுவை தெற்கு, புதுவை மேற்கு மற்றும் காரைக்கால் அணிகள் ரன் ரேட் அடிப்படையில் புதுவை தெற்கு மற்றும் புதுவை மேற்கு அணியும் நாளை மதியம் 2:00 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மோத உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us