/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமிக்கு கட்டுனர் சங்கம் வாழ்த்து
/
முதல்வர் ரங்கசாமிக்கு கட்டுனர் சங்கம் வாழ்த்து
ADDED : ஆக 04, 2025 01:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, அகில இந்திய கட்டுனர் சங்க நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை, நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் புதுச்சேரி மைய தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேற்று கோரிமேடு டென்னிஸ் மைதானத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செயலாளர் அசோகன், பொருளாளர் கங்காதரன், முன்னாள் தலைவர் பிரேம் ஆனந்த், துணை செயலாளர் ரமேஷ், முன்னாள் தலைவர்கள் செல்வகாந்தி, ஜெயக்குமார், ஜெகராஜ் மோன்ச்சர், எழிலன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித் தனர்.