/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது
ADDED : செப் 27, 2024 05:02 AM
புதுச்சேரி: பந்த் போராட்டத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த வி.சி., கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து, இந்தியா கூட்டணி சார்பில், கடந்த 18 ம் தேதி பந்த் போராட்டம் நடந்தது. அப்போது முதலியார்பேட்டையில் பயணிகளை ஏற்றிச் சென்ற இரு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராவினை ஆய்வு செய்தனர். இதில் பஸ் கண்ணாடியை உடைத்தது, தேங்காய்திட்டைச் சேர்ந்த சி.வி., பிரமுகர் முரசொலிமாறன்,23; எனத் தெரியவந்தது.
போலீசார் முரசொலிமாறன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

