/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகு குழாமாக மாறிய 'பஸ் ஸ்டாண்ட்'
/
படகு குழாமாக மாறிய 'பஸ் ஸ்டாண்ட்'
ADDED : அக் 20, 2024 04:42 AM

புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் புதிதாக கட்டப்பட்டு வருவதால், கடலுார் சாலையில் உள்ள ஏ.எப்.டி., திடலில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு, தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சிறு மழை பெய்தாலே, இந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வெள்ளக்காடாகி விடுகிறது. வெள்ளம் வடிய போதிய வசதி இல்லாததால், பஸ்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தபடியே வந்து செல்கின்றன.
பஸ் ஸ்டாண்டில் சிக்கிக்கொள்ளும் பயணிகள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை கடந்து வெளியே வர படாதபாடுபடுகின்றனர். பஸ்களில் ஏறியே வெளியே வர வேண்டிய நிலை உள்ளதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து, பருவ மழை பெய்து வருவதால், ஏ.எப்.டி., திடலில், நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இங்கு பஸ் சேவையை நிறுத்திவிட்டு, பேசாமல் அரசு படகு விடலாம் என்ற அளவிற்குசூழ்நிலை மோசமாகி உள்ளது.
கடந்த ஜூலை 16ம் தேதி முதல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏ.எப்.டி., திடலில் இயங்கி வருகின்றது. ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவுப்படுத்தி, மீண்டும் பஸ் ஸ்டாண்டை, பழைய இடத்திற்கு மாற்றினால் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும்.