/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகள் நடவடிக்கையால் ரயில் விபத்து தவிர்ப்பு நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு

ADDED : நவ 24, 2024 06:51 AM
நெல்லிக்குப்பம் : ரயில்வே அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று மாலை ராமநாதபுரத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இரவு 8:00 மணிக்கு கடலுார் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கடந்து நெல்லிக்குப்பம் அருகே வந்தது.
அப்போது, சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் வைடிப்பாக்கத்தில் இருந்த ரயில்வே கேட் மூடாததால், ரயில் பாதி வழியில் நின்றது.
அதேசமயம், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் கிராசிங்கிற்காக வரக்கால்பட்டு ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் அந்த ரயிலை அங்கேயே நிறுத்த அதிகாரிகள் கூறினர்.
அதன்பிறகு வரக்கால்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த பாசஞ்சர் ரயிலை எடுக்க சொல்லி நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். அதன் பிறகே எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்ப சிக்னல் கிடைத்தது.
இதனால் பயணிகள் ரயில் இரவு 8:௦௦ மணி முதல் 8:30 வரை நெல்லிக்குப்பத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் சிரமப்பட்டனர். அதிகாரிகள் துரித நடவடிக்கையால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.